Wednesday,February 22,2012இலங்கை::காத்தான்குடியில் இன்று (22.2.2012) அதிகாலை வீடு ஒன்றின் மீது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால் அவ்வீட்டின் முன்பகுதி சிறிய சேதத்துக்குள்ளாகியுள்ளது.
புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப்பள்ளிவாயல் வீதியிலுள்ள முகம்மது சாஜித் என்பவரின் வீட்டின் மீதே இந்த கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதனால் இவ் வீட்டின் முன் யன்னல் கண்ணாடி மற்றும் கதவு என்பன உடைந்து அங்கு போடப்பட்டிருந்த திரைப்பிடவையும்
எரிந்துள்ளன.இந்த சம்பவம் இடம் பெற்ற போது இங்கு தூக்கத்திலிருந்த எவருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.இது பெற்றோல் குண்டாக இருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
தாறுல் அதர் எனப்படும் இஸ்லாமிய பிரச்சார அமைப்பின் பொருளாளர் ஏ.எல்.எம்.நியாஸ் என்பவரின் சகலனின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment