Wednesday,February 22,2012ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர பிரதிநிதி சவேந்திரசில்வா, ஐக்கிய நாடுகளின் அமைதிக் காக்கும் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தொடர்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இன்னர் சிட்டி பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதுவர் மர்க் லியால் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்கும், ஏனைய உயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த நியமனம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
போர்க்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என கூறப்படும் மேஜர் ஜெனரால் சவேந்திரசில்வா, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக் காக்கும் குழுவுக்கு ஆலோசரகராக நியமிக்கப்பட்டமைக்கு, அண்மையில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கண்டம் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment