Wednesday,February 22,2012இலங்கை::இலங்கையில் பௌத்த பிக்கு ஒருவருக்கு மரண தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோமதிய சரண தேரர் என்ற பௌத்த பிக்குவிற்கு இவ்வாறு தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குவாக மாறுவதற்கு முன்னதாக சந்தேக நபர் குற்றச் செயலில்ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தங்காலை உயர் நீதிமன்ற நீதவான் சந்திரசேன ராஜபக்ஷவினால் மரணதண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த பௌத்த பிக்கு, மஹாகும்புரகே தர்மதாச என்ற நபரை 2000மாம்ஆண்டு ஜனவரி மாதம் 19ம் திகதி படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குவுடன் மற்றுமொரு நபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காதல் விவகாரம் காரணமாக இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment