Wednesday, February 22, 2012

புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில்:ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் மேலதிக பாதுகாப்பு கோருகிறது!

Wednesday,February 22,2012
ஜெனீவா::புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவரான விஸ்வநாதன் ருத்ரகுமார் தலைமையிலான புலிகளின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பெப்ரவரி 27 ஆம் திகதி லண்டனிலிருந்து ஜெனீவாவுக்கு வரவுள்ளதாக இலங்கைத் தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அத்துடன் புலிகளின் நெடியவன் தலைமையிலான மற்றொரு குழு மார்ச் 7 ஆம் திகதி பெல்ஜியத்திலிருந்து ஜெனீவாவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment