Tuesday, February 14, 2012

இலங்கை மீது ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும்-ரொபர்ட் ஓ பிளக்!

Tuesday, February 14, 2012
இலங்கை::இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படும் பிரேரணைக்கு, அமெரிக்கா ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அமுலாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படுதால், இது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment