Friday, February 17, 2012இலங்கை::பொலிஸ் ஆணைக்குழுவிற்காக பெயரிடப்பட்ட ஏழு உறுப்பினர்களை பாராளுமன்ற பேரவை அங்கிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் தலைவராக முன்னாள் உயர்ஸ்தானிகர் சேனக்க வல்கம்பாய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய உறுப்பினர்களாக எல்லே குணவங்ச தேரர், டி திஸாநாயக்க, ஆர்.சிவராமன், எம்.எம்.எம்.மவுஜிட், நியுட்டன் குணரத்ன மற்றும் ச்சாமனி மதுரசிங்க ஆகியோர் இடம்பெற்றுளளனர்.
ஜனாதிபதியால் பெயரிடப்படும் உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற பேரவை அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment