Friday, February 17, 2012இலங்கை::சிலாபம், மஹாவெல்ல பகுதியில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 04 வாள்கள், 06 பெட்ரோல் குண்டுகள், 04 இரும்புக் கம்பிகள் 80 போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நேற்று நான்காவது நாளாகவும் சிலாபம் மீன் சந்தை உட்பட கடற்கரை பிரதேசம் வெறிச்சோடிக் கிடந்தன. சிலாபம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதியிலுள்ள எந்தவொரு மீனவரும் கடற்றொழிலுக்காக செல்லவில்லை.
எந்நேரமும் ஆர்ப் பாட்டக்காரர்கள் நகருக் குள் நுழையலாம் என்ற நோக்கில் சிலாபம் கடற் கரை வீதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரில் இராணுவ டிரக் வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விசேட அதிரடிப்படைக்கு பதிலாக இராணுவத்தினரே அதிகளவு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் சிலாபம் நகருக்குள் கொண்டு வரப்படும் வெளி மாவட்ட மீன்கள் அனைத்தும் முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு அப்பால் மைதான மொன்றில் வைத்து விற்பனை செய்யப்பட்டன. வழமையை விட மீன் விலை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
துப்பாக்கி சூடு இடம் பெற்ற மகாவெல்ல பகுதியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் ஈடுபட்டனர். சுமார் 25 பேரிடமிருந்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டன. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் நடைபெற்று வரும் இவ் விசாரணையின் போது 4 வாள்கள், 4 இரும்பு கம்பிகள், 10 தடிகள், 80 போத்தல்கள், 06 பெட்ரோல் குண்டுகள் என்பவையும் கண்டெடுக் கப்பட்டுள்ளன.
இறுதிக் கிரியை இன்று
இதேவேளை, மரணமானவரின் மனைவி இன்று நாடு திரும்புகிறார். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத் சென்றுள்ள அவர் நாடு திரும்பிய பின்னர் நாளை எண்டனி பர்னாண்டோவின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.
இறுதிப் கிரியைகள் நடை பெறுவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானதை கண்டித்தும் துக்கத்தை வெளிக்காட்டும் நோக்குடனும் நகரில் கறுப்பு கொடிகளும், வெள்ளைக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள் ளன.
இதேவேளை, மீனவர்கள் தமது பகுதி கிராம சேவகரிடமிருந்து தாம் மீனவர் என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றை பெற்றுக் கொள்வதன் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 25 ரூபா விலைக்கழிவுடன் மண்ணெண் ணெய்யை பெற்றுக் கொள்ள முடியும் என சிலாபம் மஹா வெல்லையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment