Tuesday, February 14, 2012புதுடெல்லி::ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் வயது விவகாரம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் பிறந்த தேதி கோரிக்கையை ராணுவ அமைச்சகம் நிராகரித்ததால் அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். அந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை கடந்த வெள்ளிக்கிழமை என கூறிய நீதிபதிகள், தனது ஓய்வு காலம் வரை வி.கே.சிங் தலைமை தளபதி பதவியில் தொடரலாம் என்றும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கை வி.கே.சிங் வாபஸ் பெற்றதால் விவகாரம் முடிந்தது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று பேட்டியளித்த ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது: ராணுவ தலைமை தளபதி வயது தொடர்பாக எழுந்த பிரச்னை துரதிர்ஷ்டவசமானது. அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது மகிழச்சியளிக்கிறது. இந்த பிரச்னையை இதோடு விட்டுவிட்டு நாட்டின் பாதுகாப்புக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கோருகிறேன். ராணுவ தலைமை தளபதி மீது அரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்திலும் அரசு தெரிவித்தது. நாட்டின் பாதுகாப்பு எல்லாவற்றையும் விட உயர்ந்தது. அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அந்தோணி கூறினார்.
No comments:
Post a Comment