Tuesday, February 14, 2012

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்!

Tuesday, February 14, 2012
நியூயார்க்::ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை பான் மூனின் அமைதிக்காப்பு படைக்கான சிரேஸ்ட ஆலோசனைக்குழுவில் இணைத்துக் கொண்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது விடயம் குறித்து பான் கீ மூனுக்கு நவநீதம்பிள்ளை கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

சவேந்திர சில்வா இறுதிக் கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமைதிகாக்கும் படைக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவில் சவேந்திர சில்வாவின் பெயரை ஐக்கிய நாடுகளுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவுமே நியமித்துள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

எனவே, போர்க்குற்ற சந்தேகத்திலுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் தமது அலுவலகம் உரிய கவனம் செலுத்தி வருவதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment