Tuesday, February 14, 2012

புலிகளின் தபால் முத்திரை குறித்து ஜெர்மனி மன்னிப்பு கோரியுள்ளது!

Tuesday, February 14, 2012
ஜெர்மன்::இலங்கை::புலிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால்முத்திரைகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் ஜெர்மன் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.

வேண்டுமென்றே தபால் முத்திரை வெளியிடப்படவில்லை என ஜெர்மன்அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான புலிச் சின்னங்கள் தாங்கிய தபால் முத்திரைகள்எதிர்காலத்தில் அச்சிடப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தபால் முத்திரைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்பைஅறிந்து கொள்ளாமல் முத்திரைகள் வெளியிடப்பட்டதாக ஜெர்மன் தபால் திணைக்களத்தின் துணைத்தலைவர் டொக்டர் ரெனியர் வென்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை மக்களிடமும், இலங்கை அரசாங்கத்திடம்மன்னிப்பு கோருவதாக ரெனியர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தபால் முத்திரைப் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்என அவர் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment