Tuesday, February 14, 2012

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு!

Tuesday, February 14, 2012
திருச்சுழி::பிரேயரை புறக்கணித்து வகுப்பறையில் தாளம்போட்டுக் கொண்டிருந்ததை கண்டித்த ஆசிரியருக்கு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 900க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளி மைதானத்தில் பிரேயர் நடந்தது. அப்போது பிளஸ் 2 மாணவர்கள் ஒரு சிலர் பிரேயரை புறக்கணித்து வகுப்பறையில் இருந்து கொண்டு மேஜையில் தாளம் போட்டபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஆங்கில ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களை கண்டித்து, பிரேயருக்கு வருமாறு அழைத்தார். இதனால் ஆவேசமடைந்த 2 மாணவர்கள் வெளியே வந்து வாசல்படியில் நின்று கொண்டு, ‘எங்கள் வகுப்பறைக்குள் வந்தால் உன்னை கொன்று விடுவோம்Õ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் பள்ளியில் பரவியது. இதையடுத்து ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்பட 30 பேர் இன்று காலை 9.30 மணியில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து மைதானத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருச்சுழி டிஎஸ்பி மோகன் மற்றும் போலீசார் வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘ஆசிரியரிடம் அத்துமீறி நடந்து கொண்ட மாணவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பள்ளி இறுதித்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் அனைத்து மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.

No comments:

Post a Comment