Tuesday, February 14, 2012இலங்கை::மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தோல்வி கண்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதில் அந்த அறிக்கை தோல்வியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடபிரதேசங்களில் இராணுவ குறைப்பு , இடம்பெயர்ந்தவர்களுக்கு பாதுகாப்பளித்தல் , ஊடக சுதந்திரம் உள்ளிட்ட ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறந்த யோசனைகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையில் அடங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.
எனினும் பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரம் குறித்து தொடர்ந்தும் விமர்சிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கெவின் ரட் வலியுறுத்தியுள்ளார்.
பிரச்சினையுடன் தொடர்புடைய இரு தரப்பிலும் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களி்ல் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதில் ஆணைக்குழு அறிக்கை தோல்வி கண்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன மற்றும் பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment