Tuesday, February 14, 2012

கச்சதீவிற்கு இந்தியாவிலிருந்து வரும் யாத்திரீகர்களிடம் பொருட்களை வாங்கத் தடை!

Tuesday, February 14, 2012
இலங்கை::கச்சதீவிற்கு வரும் இலங்கை யாத்திரீகர்கள் இந்தியாவிலிருந்து வரும் யாத்திரீகர்களிடம் பழங்களையோ மற்றும் உணவு பணடங்களையோ வாங்கிக்கொள்ளவோ ஊருக்குள் எடுத்துவரவோ தடை விதிக்கப்பட்டள்ளது.எதிர்வரும் மார்ச் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கச்சதீவு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை திருச்சொருப பவனியுடன் முடிவடையவுள்ளது.இந்தியாவிலிருந்து இம்முறையும் சுமார் மூவாயிரத்திற்குமதிகமான யாத்திரீகர்கள் பங்கெடுப்பரென எதிர்பார்க்கப்படுகின்றது.அதேயளவில் இலங்கை யாத்திரீகர்களும் வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் தொடர்ந்தும் மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றல்கள் கட்டப்படுத்தப்படாதுள்ள நிலையில் இவை கச்சதீவிற்கு வரும் இந்திய யாத்திரீகர்கள் மூலம் பரவலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளிற்கு சென்று திரும்பும் இலங்கையர்கள் தடுப்பு மருந்துகளை பெற்றக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .கடந்த வாரம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கச்சதீவு உற்சவம் தொடர்பான ஏற்பாட்டு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment