Tuesday, February 14, 2012

ஐ.நா காரியாலத்தின் எதிரில் இலங்கையர் புகலிடம் கோரி போராட்டம்!

Tuesday, February 14, 2012
தாய்லாந்::தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்தின் எதிரில் இலங்கையர் ஒருவர் புலிடம் கோரி போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புகலிடம் வழங்கப்படாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக, அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்.

37 வயதான கவினமுதம் தேவகுமார் என்ற இலங்கையரே இவ்வாறு போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேவகுமார், அவரது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் எதிரில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் மீளவும் தம்மையும் தமது குடும்பத்தாரும் இலங்கைக்கு நாடு கடத்தக் கூடுமென தேவகுமார் அச்சம் வெளியிட்டுள்ளார்.

புகலிட விண்ணப்பம் உரிய தகுதிகளைக் கொண்டிருந்தால் புகலிடம் வழங்கப்படும் என அதிகாரிகள், தேவகுமாரிடம் வாக்குறுதியளித்துள்ளனர்.

தேவகுமாரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், குடும்ப உறுப்பினர்கள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment