Thursday, February 16, 2012

அண்ணா நூலக வழக்கு ஒத்திவைப்பு!

Thursday, February 16, 2012
சென்னை::அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய 3 வது முறையாக தமிழக அரசு அவகாசம் கேட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கில் பதில் மனு தர 6 மாதம் தேவைப்படுமா- என்று தமிழக அரசிடம் தலைமை நீதிபதி கேள்வி எழப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், நூலக வழக்கு நிலுவையில் உள்ளபோதே தமிழக அரசு நூலகத்துக்கான வசதியை குறைப்பதாகவும், நூலகத்துக்கு நூலகள் மற்றும் பணியாளர்களை குறைத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட மனுதாரரின் புகாரை தனி மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுரை வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment