Thursday, February 16, 2012

அரசாங்கத்துக்கு ஆதரவில்லை–ரணில்!-ஐ.தே.கவுக்கு ஆதரவில்லை - ஜே வி பி!-எதிர்கட்சி ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூ!

Thursday, February 16, 2012
இலங்கை:: பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆதரவளிக்கப்படு;ம்

எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க போவதில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், அரசாங்கம், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன இணங்கிக் கொண்ட விடயங்களை முதலில் ஆமுல்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே வி பி இது தொடர்பில் இணங்கிய விடயங்கள் தொடர்பில் தெரியவரவில்லை

எனினும் இது தொடர்பில் கலந்துரையாடி, அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவும், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது விலைகளை அதிகரித்து வருகிறது.

தமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை அரசாங்கம் சுட்டுக் கொல்கிறது.

இவற்றுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஒரு போதும் ஆதரவளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்...

ஐ.தே.கவுக்கு ஆதரவில்லை - ஜே வி பி!

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஜே வி பி தெரிவித்துள்ளது.

ஜே வி பியின் பொது செயலாளர் டில்வின் சில்வா பத்தரமுல்லை – பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி எரிபொருள் விலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக வாய் முனகல்களை மாத்திரமே வெளியிட்டு வருகிறது.

ஆனால் தற்போதே ஜே வி பி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

நாளைய தினம் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்த்திற்கு ஐக்கிய தேசிய தமக்கு அழைப்பு விடுவிக்கவில்லை.

அவ்வாறு அழைப்பு விடுத்தாலும், விடுக்காவிட்டாலும், தாங்கள் இதில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேச பற்றுள்ள அரசாங்கம் தற்போது வல்லரசுகளுடன் இணக்கம் பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து அதன் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே விலை அதிகரிப்புகள் இடம்பெற்றுள்ளது.

தேசப்பற்றுள்ள அரசாங்கம் தற்போது தற்போது வல்லரசு நாடுகளுக்கு அடிமையாகி, இணங்கி செயற்பட ஆரம்பித்துவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்கட்சி ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூ!

நாளை நடைபெறவுள்ள எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிரான எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்த்தில் தாமும் கலந்துக் கொள்ளவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment