Saturday, February 11, 2012

மாலைதீவு அரசியல் நிலைமையால் இலங்கையரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

Saturday, February 11, 2012
இலங்கை::மாலைதீவில் நிலவும் அரசியல் நிலைமை காரணமாக அங்குள்ள எந்தவொரு இலங்கையரினதும் பாதுகாப்பக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதனால் மாலைதீவில் தொழில்நிமிர்த்தம் செல்லும் இலங்கையர்கள் அச்சமடையத் தேவையில்லை என வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளே தற்போது ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் இதுவரையில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வெளிவிவகார பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாலைதீவில் நடைபெறும் ஜனநாயகத்திற்கான மக்கள் போராட்டங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment