Saturday, February 11, 2012இலங்கை::கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை காத்தாண்குடி பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர் என முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து 3 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்கப் பிரஜையொருவரையும் அவரின் சாரதியையும் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் பஸ் சாரதியொருவரை பெப்ரவரி 24 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
அமெரிக்கப் பிரஜையொருவரையும் அவரின் சாரதியையும் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் பஸ் சாரதியொருவரை பெப்ரவரி 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை நீதவான் சரத் மொரவக்க இன்று உத்தரவிட்டார்.
கொழும்பு – பொலன்னறுவை வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ் ஒன்றின் சாரதியான எம்.எம். சமிந்த உதயசம்பத் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஆவார்.
சிகிரியா நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனமொன்றுடன் இச்சந்தேக நபர் செலுத்திக்கொண்டிருந்த பஸ் மோதியது. அதையடுத்து மேற்படி வாகனத்திலிருந்து சாரதியை வெளியே இழுத்து சந்தேக நபரான பஸ்சாரதி தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இம்மோதலை நிறுத்த முயன்ற அமெரிக்கப் பிரஜையையும் சந்தேக நபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பஸ் சாரதியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அமெரிக்கப் பிரஜையிடமிருந்து அவர்கள் வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment