Saturday, February 11, 2012

கூடங்குளம் அணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை திறக்கக் கோரி பேரணி சென்ற த‌மிழக இளை‌ஞ‌ர் காங்கிர‌ஸ் தலைவ‌ர் யுவராஜா உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் கைது!

Saturday, February 11, 2012
நெ‌ல்லை::கூடங்குளம் அணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை திறக்கக் கோரி பேரணி சென்ற த‌மிழக இளை‌ஞ‌ர் காங்கிர‌ஸ் தலைவ‌ர் யுவராஜா உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் ராதாபுரத்தில் கைது செய்யப்பட்டனர்.

நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம், கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்கக் கோரி இளைஞர் காங்கிரசின் சார்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

வள்ளியூரில் இருந்து கூடங்குளம் வரை நடைபெறும் இந்த நடைபயணத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நடைபயணம் நே‌ற்று மாலை கூடங்குளத்தில் நிறைவடைவதாக இரு‌ந்தது.

32 கிராமங்கள் வழியாகச் செல்லும் இந்த நடைபயணத்தில், அணுமின் நிலையம் திறக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் விளக்‌கின‌ர்.

நடைபயணத்தையொட்டி 500க்கும் மேற்பட்ட காவல‌‌ர்க‌ள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த‌‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ராதாபுர‌த்‌தி‌ல் யுவராஜா உ‌‌ள்‌ளி‌ட்ட கா‌ங்‌கிரசா‌ரை தடு‌த்‌து ‌நிறு‌த்‌திய கா‌வ‌ல்துறை‌யின‌ர் அவ‌ர்களை கைது செ‌ய்தன‌ர்.

No comments:

Post a Comment