Sunday, February 26, 2012

வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல்!

Sunday, February 26, 2012
இலங்கை::வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் நேற்று சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கைதிகளிடம் கையடக்க தொலைபேசியொன்று உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விசாரணைக்காக சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் தன்னீர் பிரயோகம் நடத்தியதாக சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து கல் வீச்சும் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு சந்தேகநகபர்கள் சிலரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment