Sunday, February 26, 2012

இலங்கைத் தொடர்பில் எந்வொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை - மஹிந்த சமரசிங்க!

Sunday, February 26, 2012
இலங்கை::ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக இதுவரை எந்வொரு உத்தியோகப்பூர்வ அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என, ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கூட்டத்தொடரின்போது இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக விளக்மளிக்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் நிலையான திட்டமொன்றிற்கு அமைய செயற்பட்டு வரும் நிலையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படுவது எந்த வகையிலும் உகந்தல்லவென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிக்கிறார்.

இந்த விடயம் தொடர்பாக பல்வேறு நாடுளையும் தெளிவுபடுதத் எண்ணியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இலங்கை குழுவின் தலைவர் என்ற வகையில் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் சில தூதுவர்களை சந்தித்து நாட்டின் நிலைமைய தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாக ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை – மகிந்த சமரசிங்க!

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட உள்ள எந்தவிதமான சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவா சென்றுள்ள இலங்கை குழுவின் பிரதானியான அமைச்சர் மகிந்த சமரசிங்க அங்கிருந்து எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் பிரிவினைவாதிகளுக்கு இடமளிக்க அரசாங்கம் இடமளிக்க போவதில்லை என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment