Sunday, February 26, 2012
மிட்னாப்பூர்::மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், கிழக்கு எல்லை படையினருக்கும் (இ.எப்.ஆர்.) இடையே ஏற்பட்ட மோதலில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 20பேர் படுகாயமடைந்தனர்
மேற்கு வங்க போலீஸ் துறையின் ஒரு பிரிவினர், கிழக்கு எல்லை பாதுகாப்பு படையினர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இவர்களின் தலைமையகம், மேற்கு வங்க மாநிலம் கராக்பூர் அருகே சல்வா பகுதியில் உள்ளது. இதே வளாகத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் முகாமும் உள்ளது. இங்குள்ள கோவிலில் சிவராத்திரி விழாவை ஒட்டி, பொருட்காட்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அங்கு வந்தனர். அப்பெண்களை கிழக்கு எல்லை படையைச் சேர்ந்த சிலர், தகாத வார்த்தைகளால் கேலி செய்தனர். இதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தட்டிக் கேட்டனர். இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கிழக்கு எல்லை படையினர் , மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை தாக்கினர். இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 20 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் கராக்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இரு படைகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment