Friday, February 24, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவு!

Friday, February 24, 2012
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகநிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புக்கள்குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நோர்வே மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க தலைமையிலான சில நாடுகள் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்துகொள்வதற்காக பலர் காத்திருப்பதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தை வென்றுள்ளது எனவும், தற்போதுசமாதானத்தை வென்றெடுக்க வேண்டிய கடமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment