Friday, February 24, 2012

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கடும் நடவடிக்கை அமெரிக்கா உறுதி: ஜெனீவாவில் அமெரிக்கா - இலங்கை மின்னஞ்சல் சமர்!

Friday, February 24, 2012
ஜெனீவா::ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை வரைவதற்கு அமெரிக்காவுடன் இலங்கை நெருங்கிச் செயற்படுவதாக அமெரிக்கா மேற்கொள்ளும் பிரசாரத்திற்கு எதிராக பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.

பேரவையின் 47 அங்கத்துவ நாடுகளுக்கும் இலங்கைத் தூதுவர் திருமதி தமாரா குணநாயகம் எழுதியுள்ள இக்கடிதத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதரகமும் ஜெனீவாவிலுள்ள சர்வதேச அமைப்புகளும் அங்ககத்துவ நாடுகளின் ஆதரவை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் தான் நெருக்கமாக செயற்படுவதுபோலவும் பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் கூட்டாக செயற்படுவதுபோலவும் அமெரிக்கா காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மிரியம் ஷஹ்ர்ஷார்ட் என்பவர் கையெழுத்திட்டு, அமெரிக்கத் தூதரகத்தினால் ஐ.நாவுக்கும் ஜெனீவாவிலுள்ள ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதமொன்று பெப்ரவரி 21 ஆம் திகதி எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மார்ச் மாதம் அமெரிக்காவின் அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு அக்கடிதம் ஆதரவு கோரியிருந்தது' என தமாரா குணநாயகம், அங்கத்துவ நாடுகளின் தூதுவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எந்தவொரு தீர்மானம் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கமோ அல்லது ஜெனீவாவிலுள்ள அதன் தூதரகமோ அமெரிக்காவின் பிரதிநிதிகளுடன் ஒருபோதும் இணைந்துசெயற்படவில்லை என அவர் கூறியுள்ளார.;

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கடும் நடவடிக்கை- அமெரிக்கா உறுதி!

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் மார்ச் 27ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை வலுப்படுத்த அமெரிக்காவுடன் மேலும் பல நாடுகள் இணைந்துள்ளன.

இலங்கை 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக ஐக்கியநாடுகள் சபை குற்றஞ்சுமத்தியிருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அறிக்கை சமர்ப்பித்தது.

எனினும் அதனை உலக நாடுகள் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. அவ் அறிக்கையில் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லை என இலங்கை மீது தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவர உள்ளதாக அமெரிக்கா அறிவித்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment