Friday, February 24, 2012

இந்திய மீனவர்கள் நாம் ஒருபோதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை: இலங்கை உயர்ஸ்தானிகர்!

Friday, February 24, 2012
சென்னை::இந்திய மீனவர்கள் சில வேளைகளில் எல்லை மீறி வந்தாலும் இலங்கை கடற்படையினரால் அவர்கள் மீது ஒருபோதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லையென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குஜராத் கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

'இந்திய மீனவர்கள் மீது நாங்கள் ஒருபோதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை. அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிய வேளைகளில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்;' என அவர் கூறினார்.

அண்மையில் கடற்கொள்ளையர்களென நினைத்து தவறுதலாக தென்கரையோரத்தில் நின்ற இந்திய மீனவர்கள் மீது இத்தாலிய வணிகக் கப்பல் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்
இரு மீனவர்கள் பலியாகியதாகவும் பிரசாத் காரியவசம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த வாய்ப்புக்களை கொண்டமைந்த இலங்கையில் சுற்றுலாத் துறையை விருத்தி செய்ய முடியுமென்பதுடன், இலங்கைக்கு தற்போது அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால்
இந்தியர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைக்கப்பட்டுவரும் 500 மெகாவாட் அனல் மின்நிலையமானது தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகுமெனவும் அவர் கூறினார்.

மாலைதீவில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடியை இந்திய அரசாங்கம் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் அவதானித்த அதேவேளை, உள்விவகாரங்களில் தலையீடாமலும் கையாண்டதாகவும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment