Wednesday,February 22,2012இலங்கை::வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழப்பு:-
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தகைதி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த கைதி களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் Nர்ந்த 30 வயதுடையஅமான் என்பவராவார்.
உயிரிழந்தவரின் சடலத்தினைசிறைச்சாலை அதிகாரிகள் வவுனியா பொது வைத்தியசாலையில்ஒப்படைத்திருந்த நிலையில் சடலத்தினை பிரேத அறையில் சென்று வவுனியா மாவட்ட நீதிவான்அலெக்ஸ்ராஜா நேற்று மாலை பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் சடலத்தினை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் கையளிக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளார்.
இறந்தவர் வவுனியாநகர்ப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே குற்றச்யெலுடன்தொடர்புடையதாக கைது செய்யப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment