Friday, February 24, 2012

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் இறுதியான கடன் தவணையை பெற்றுக்கொள்ள இலங்கை தயார்!

Friday, February 24, 2012
இலங்கை::சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் இறுதியான கடன் தவணையை பெற்றுக்கொள்ள போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருந்த போதிலும், அந்த இறுதிக்கடனை தவணையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு, 2.6 பில்லியன் டொலர்களை வழங்க நாணய நிதியம் இணங்கியதுடன் அதனை 9 தவணைகளாக வழங்க தீர்மானித்தது. கடன் வழங்கப்பட வேண்டுமாயின் பொது நலன்புரி நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் நிதியை குறைத்து, ரூபாவை மிதக்க செய்தல், அந்நிய செலாவணி கட்டுப்பாட்டை நீக்குதல், வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை மொத்த தேசிய வருமானத்தில் 5 வீதமாக குறைத்தல் போன்ற பல நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்திருந்தது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் பணத்தை இலங்கையின் கையிருப்பில் உள்ள வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புடன் சேர்க்க வேண்டாம் என நாணயம் நிதியம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இறுதி கடன் தவணையான 800 மில்லியன் டொலர்களை பெற அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த கடனை தவணை பெறுவதன் மூலம் இதுவரை ஒரு வீதமாக இருந்த கடனுக்கான வட்டி வீதம், 3.1 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த வட்டி வீதத்தை முழு தொகையான 2.6 பில்லியன் டொருக்கும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment