Tuesday, February 14, 2012இலங்கை::புலிகளை தோற்கடித்த இந்த அரசாங்கத்தை அமெரிக்கா, பழிவாங்க முயற்சித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.பயங்கரவாதத்தின் மூலம் இலங்கையை மற்றுமொரு இஸ்ரேலாக மாற்ற அமெரிக்கா முயற்சித்தது.
பிராந்திய வலய நாடுகளின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதே அமெரிக்காவின் திட்டமாக அமைந்திருந்தது. எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் இந்த சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது விமல் வீரவன்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான திட்டங்களைக் கண்டு நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை. காலாணித்துவ நாடுகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment