Tuesday, February 14, 2012இலங்கை::தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததையடுத்து தனியார் பஸ் போக்கவரத்துத் துறையினர் நாடளாவிய ரீதியில்
மேற்கொண்ட பணி பகிஷ்கரிபபு முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக நாடெங்கிலும் பயணிகள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இதேவேளை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மீது சில விஷமிகள் கற்களை வீசியுள்ளனர். இதனால் ஆறுக்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்திருப்பதாக இ. போ. ச. தலைவர் சசி வெல்கம கூறினார்.
இதேநேரம் பயணிகள் போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவித்ததுடன் இயல்பு நிலையைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொலிஸ் திணைக்களப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
அரசாங்கத்துக்கும் தனியார் துறையினருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தனியார் பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்கச் செய்ய இணக்கம் காணப்பட்டது. முதல் கட்டணம் 09 ரூபாவாக நிர்நயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment