Tuesday, February 14, 2012

தற்கொலை அங்கி தொடர்பாக கதிர்காமத்தில் ஒருவர் கைது :- கண்டி போகம்பர சிறைச்சாலையில் கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார்!

Tuesday, February 14, 2012
இலங்கை::கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார்.

கண்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தின் தற்காலிக சிறைக்கூடத்தில் நேற்று மாலை தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த கைதி தப்பிச் சென்றுள்ளதாக போகம்பர சிறைச்சாலை அத்தியட்சகர் திஸ்ஸ ஜயசிங்க குறிப்பிட்டார்.

கையடக்கத் தொலைபேசி ஒன்றை திருடிய சம்பவம் ஒன்றில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்யுமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக திஸ்ஸ ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தப்பிச் சென்ற கைதியை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பஸ்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் 11 பேர் விளக்கமறியலில்!

தனியார் பஸ் பகிஷ்கரி்ப்பின் போது போக்குவரத்தில் ஈடுபட்ட பஸ்களை சேதப்படுத்தி இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை ஜ -எல மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இவர்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 35 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த சந்தேகத்தின் பேரில் 46 பேர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலை அங்கி தொடர்பாக கதிர்காமத்தில் ஒருவர் கைது!

கதிர்காமத்தில் வாடிவீடு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைத் தாக்குலுக்குப் பயன்படுத்தப்படும் அங்கி தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment