Tuesday, February 21, 2012

நேபாளத்தில் சிவராத்திரி விழா பசுபதிநாத் கோயிலில் 7 லட்சம் பேர் குவிந்தனர்!

Tuesday, February 21, 2012
காத்மாண்டு::சிவராத்திரி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடந்தன. நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயிலில் நவராத்திரி பூஜைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 2 லட்சம் இந்தியர்கள் உள்பட 7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். சிவனை வழிபட அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தி பாடல்கள் முழங்க, மகா சிவராத்திரி பூஜை விமரிசையாக நடந்தது. பக்தர்களுக்கு தங்கும் வசதி, உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகளை பசுபதிநாத் பகுதி வளர்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. அசம்பாவிதங்களை தடுக்க 4,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்ட இந்தியர்கள் 20 பேர் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர். மகா சிவராத்திரி பூஜைகள் முடிந்த பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று காத்மாண்டு போலீஸ் செய்தித் தொடர்பாளர் திராஜ் பிரதாப் சிங் கூறினார்.

No comments:

Post a Comment