Tuesday, February 21, 2012இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினரின் அறிக்கை தொடர்பில் விழிப்புணர்வுஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும்நோக்கில் தாருஸ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழு அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தது.
இந்த அறிக்கை தொடர்பில் இலங்கை மக்களை தெளிவுபடுத்தும் விசேடதிட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
முதல் கட்டமாக தாருஸ்மன் அறிக்கை தொடர்பில் படைத்தரப்பினருக்குவிளக்கம் அளிக்கப்பட உள்ளது.
காவல்துறை அத்தியட்சகர் வலய அடிப்படையில் முப்படையினருக்கும்காவல்துறையினருக்கும் முதலில் தாருஸ்மன் அறிக்கை பற்றி விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கும் அறிக்கை தொடர்பில்விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாருஸ்மன் தலைமையிலான அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment