Tuesday, February 21, 2012

தஞ்சாவூரில் பிரபல நக்சலைட் ஒருவன் கைது!

Tuesday, February 21, 2012
தஞ்சாவூர்::தஞ்சாவூரில் பிரபல நக்சலைட் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மணிவாசகம் என்ற அந்த நபர் நக்சலைட் அமைப்பில் மாநில அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் மணிவாசகம் கைது செய்யப்பட்டான். இவர் கூட்டாளி சிவா என்ற பார்த்திபன் அப்போது நடந்த சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டான் . இதில் மணிவாசகம் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2007ம் ஆண்டு ஜாமீன் வாங்கிய மணிவாசகம் 2008ம் ஆண்டு முதல் தலைமறைவானான். இந்நிலையில் மணிவாசகம் தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று இரவு மணிவாசகத்தை கைது செய்த போலீசார் அவனை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

No comments:

Post a Comment