Wednesday,February 22,2012கனடாவின் டொரொன்டோ நகரில் நேற்று முன்தினம் மனித உரிமை மாநாடு ஒன்றை நடத்திய உலக தமிழர் பேரவை, 25 ஆயிரம் டொலர்களை சேகரித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த மாநாடு உலக தமிழர் பேரவையின் தலைவர் போதகர் இம்மானுவேல் தலைமையில் நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு இணையாக இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதில், 5 நாடுகளை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், 400 புலிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டதாகவும் திவயின கூறியுள்ளது.
அதேவேளை இந்த கூட்டததின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் சவேந்திர சில்வாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்காக எனக் கூறி, மேலும் 5 ஆயிரம் டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment