Wednesday, February 22, 2012

திருப்பூரில் மின்வெட்டைக்கண்டித்து தொழில் பாதுகாப்பு குழுவினரின் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறுகிறது!

Wednesday,February 22,2012
திருப்பூர்::திருப்பூரில் மின்வெட்டைக்கண்டித்து தொழில் பாதுகாப்பு குழுவினரின் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறுகிறது. தடையில்லா மின்சாரம் கோரி வர்த்தக சங்கங்களும் கடையடைப்பில் ஈடுபட்டு உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. பல்லடம், மேட்டுப்பாளையத்திலும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை.

அதன்படி கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பொள்ளாச்சி, பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு, வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. அவினாசியில் நூற்றுக்கணக்கான கடைகள் மூடப்பட்டு உள்ளன. சிறு தொழில் கூடங்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. திருப்பூரில், 5 ஆயிரத்துக்கும் அதிகமான பனியன் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினமும் 10 மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டு வருவதால், பனியன் உற்பத்தி 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டர்களை முடிக்க முடியவில்லை. சாய ஆலை மூடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் திருப்பூருக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment