Wednesday, February 22, 2012

23 கைதிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த ஜனாதிபதி: ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனுவை மட்டும் தள்ளுபடி செய்தார்!

Wednesday,February 22,2012
புதுடெல்லி::டெல்லியைச்சேர்ந்த சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்தார். அதில் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய தூக்கு தண்டனை கைதிகளில் எத்தனை பேரின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அவருக்கு உடனடியாக பதில் கிடைத்தது. அதில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ராஜீவ்காந்தி கொலையாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்பட 31 பேர் கருணை மனு அனுப்பி இருந்தனர். அதில் 23 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி குறைத்தார்.

ராஜீவ் கொலையாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணை மனுவை மட்டும் தள்ளுபடி செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை நரபலி கொடுத்த சுசில்மூர் என்பவரின் தூக்கு தண்டனையை கூட ஆயுள் தண்டனையாக குறைத்தார். மரண தண்டனைக்கு தகுதி உள்ள இந்த கைதிக்கு கூட ஜனாதிபதி கருணை காட்டியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment