Wednesday, February 22, 2012

ரூ.1 கோடி பணம் சிக்கிய விவகாரம்:ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மகனிடம் போலீஸ் விசாரணை!

Wednesday,February 22,2012
மும்பை::ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் மகன் ராவ்சாகிப் செகாவத். இவர் மராட்டிய மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது அமராவதி மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் நள்ளிரவில் அமராவதி மாவட்டம் குட்கேநகர் அருகே காரில் சென்றபோது போலீசார் வாகன சோதனை நடத்தி னர். அப்போது ராவ்சாகிப் செகாவத் காரில் ரூ.1 கோடி பணம் சிக்கியது. அந்த பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய தஸ்தா வேஜு இல்லாததால் போலீசார் அதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராவ் சாகிப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவருடன் காரில் சென்ற மராட்டிய மாநில காங்கிரஸ் பொது செயலாளர் கணேஷ் பட்டீல், ஆஷிஷ் பதாங்கர், டிரைவர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. விசாரணை அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து 4 பேரும் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அதன்படி ராவ்சாகிப் செகாவத் உள்பட 4 பேரும் நேற்று அமராவதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர் களுடன் வக்கீல் வாசிம் மிர்சாவும் வந்தார். பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை 1 மணி நேரம் விசாரணை நடந்தது. அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நிருபர்கள் சந்தித்து கேட்ட போது விசாரணை விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். பணத்துக்கான உரிய ஆவணங்கள் எங்கே? தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்பன போன்று சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

அடுத்தக்கட்டமாக வருகிற 28-ந்தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கட்சி பிரமுகர்களிடம் விசாரணை நடைபெறும்.

No comments:

Post a Comment