Tuesday, February 21, 2012

புதையல் தேண்டிய 10 பேர் கைது!.-

Tuesday, February 21, 2012
இலங்கை::கல் ஓயா வனப்பகுதிக்குான சேனாநாயக்க சமுத்திரத்திற்கு அருகில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணித்த கார் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படை படைமுகாமின் உத்தியோகத்தர் குழுவால் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவினர் இங்கிணியாகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றைய தினம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விலக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாகரையில் மரக்குற்றி கடத்தியவர்கள் கைது!

வாகரை ஊரியங்கட்டு பிரதேசத்தில் அனிமதிப்பத்திரமி்றி வெட்டப்பட்ட ஒரு தொகை மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளர்.

இநத சமபவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மூவருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வாழைச் சேனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பத்துள்ளது.

வனப் பதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டியதாக குறித்த சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய இந்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment