Sunday, January 1, 2012

அரசாங்கத்துடனான பேச்வார்த்தையை இன்னும் கைவிடவில்லை:காணி/பொலிஸ் வடக்குகிழக்கு இணைப்பு போன்ற முக்கிய விடயங்களில் அரசாங்கத் தரப்பிடமிருந்து உறுதிமொழியும் ஒப்புதலும் வழங்கப்பட்டால் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுவது பற்றிய தீர்மானத்திற்கு வர முடியும் புலிகூட்டமைப்பு-சம்பந்தன்!

Sunday, January, 01,2012
இலங்கை::அரசாங்கத்துடனான பேச்வார்த்தையை (புலி)கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை. காணி, பொலிஸ், வடக்குகிழக்கு இணைப்பு போன்ற முக்கிய விடயங்களில் அரசாங்கத் தரப்பிடமிருந்து உறுதிமொழியும் ஒப்புதலும் வழங்கப்பட்டால் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுவது பற்றிய தீர்மானத்திற்கு வர முடியும் என தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நடைபெற்ற தமிழசுரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பை ஒரு அரசில் கட்சியாக பதிவு செய்வது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் (புலி)கூட்டமைப்பின் தலைவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அரசுடன் தொடர்ந்து நடத்திவரும் பேச்சுகளில் மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்து வருகிறது. நாம் எவற்றையும் புதிதாக கேட்கவில்லை. ஏற்கனவே பல தடவை முன்வைத்த விடயங்களையே வலியுறுத்தி வருகிறோம்.

அதன் அடிப்படையில் நியாயமான, என்றும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம். அதுவே தமிழ் மக்களின் அபிலாஷை, எதிர்பார்ப்பு எல்லாம். இந்த யதார்த்தமான நிலைமையை உணர்ந்து அரசும் நேர்மையாக செயற்பட முன்வரவேண்டும்.

இதன் மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து இன மக்களும் நன்மையடைவார்கள் அரசியல் தீர்வுதான் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் வழிவகுக்கும் என்றார்

No comments:

Post a Comment