Sunday, January, 01,2012இலங்கை::யுத்தம் நடைபெற்ற காலத்தில், பாரிய தாக்குதல் மற்றும் கொலைகளை மேற்கொள்வதற்காக தகவல்களை சேகரித்ததாக கூறப்படும் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரை விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர் அனுராதபுரம் விமான நிலைய தாக்குதல் உட்பட புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புள்ளவர் என காவற்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேஜர் ஜெனரல் ஜனக்க பெரேராவை கொலை செய்வதற்கான புலனாய்வு தகவல்களையும் இந்த நபர் திரட்டியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காவற்துறையினர் முன்வைத்த வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதமன்றம், விசாரணை முடியும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment