Sunday, January, 01,2012இலங்கை::மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மத்திய செயற் குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற போது அதன் தற்போதைய தலைவரான சோமவங்ச அமரசிங்கவே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பதினொரு பேரடங்கிய புதிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை, மாற்றுக் கொள்கைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேர் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, ட கட்சியின் பிரதான செயலாளர் பிரசார செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவி நியமனங்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளன.ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம தெபரவௌ விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற வருடாந்த மாநாட்டிலேயே இந்த நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment