Monday, January 30, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளுக்கு நிகராக செயற்பட்டு வருகின்றனர்:தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமே முன்வைக்கப்படும்!

Monday, January 30, 2012
இலங்கை::தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்

தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் குறித்து

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவே

இறுதித் தீர்வுத் திட்டம் குறித்து தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் சற்று முன்னர் அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு எவ்வாறான அதிகாரங்களை பகிர்வது என்பது தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும், அதிகாரப் பகிர்வு குறித்து தனித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வுகளை மேற்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு பிரதிநிதிகளை

பெயரிடாமை வருத்தமளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு தமது பிரதிநிதிகளை பெயரிடுவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை குறித்த பரிந்துரைகளை முன்வைத்து தீர்வுகளை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புலிகளுக்கு நிகராக செயற்பட்டு வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இணக்கப்பாடுகள் தொடர்பில் புலிகள் பின்பற்றிய நிலைப்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.

பேச்சுவார்த்தைகளுக்கு வருவார்கள் பின்னர் விலகிச் செல்வார்கள் பின்னர் நிபந்தனைகளுடன் பேச்சுhவர்த்தை நடத்தக் கோருவார்கள் என அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தை வழங்கத் தயார் என குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், இந்தத் தீர்வுத் திட்டத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமே முன்வைக்கப்படும் - ஜனாதிபதி

தேசிய இனப்பிரச்சிகைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமே முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல மக்கள் சமூகங்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வின் மூலமே தீர்வுத் திட்டங்களைஎட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் சகல பிரச்சினைகளும் செவிமடுக்க அரசாங்கம் தயார் நிலையில ;இருக்கி;ன்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிவினைவாத அரசியலை முன்னெடுப்பதற்கு இது உரிய தருணமல்ல என அவர்குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சகல அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படவேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக சகலரும் பேதங்களைக்களைந்து இணைந்து செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் தேவைக்கேற்ற தீர்வுகளை முன்வைக்க முடியாது – எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கைக்குள்ளேயே தீர்வு - ஜனாதிபதி

எந்தவொருபிரச்சினைக்கும் இலங்கைக் குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டுமே தவிர வெளிநாடுகளின்தேவைக்கேற்ப தீர்வுகளை முன்வைக்க நாம் தயாரில்லை என்பதை தெளிவாக கூறுவதுடன், சர்வதேசத்தேவைக்கேற்ப நாம் செயற்படாமல் நாட்டு மக்களின் தேவைக்கேற்ப யெற்படுவோம் என ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே எம்மீதுபொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் வெளிநாடுகளுக்கு சென்று பொய்களை கூற முற்படாமல் எமதுபிரச்சினைகளை தீர்க்க எம்மிடம் இணைந்து யெற்பட தயாராகுங்கள் என்றும் ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.

பொலனறுவையில் நேற்றுநடைபெற்ற நீர்திட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறுதெரிவித்துள்ளார்.

நீர்த்திட்டவிழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்...

முழு நாட்டுமக்களுக்கும் குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை நாங்கள்ஆரம்பித்துள்ளோம். தற்போதைய நிலைமையில் 61 வீதமான மக்களுக்கு குடி நீர் கிடைக்கப்பெற்றுள்ளது. இன்றிலிருந்து பொலனறுவை பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கிறது. உங்களுக்கான வசதிகளைசெய்து கொடுப்பதே எமது பொறுப்பாகவுள்ளது. இந்த நாட்டில் 30 வருடங்களாக யுத்த மொன்றுகாணப்பட்டது. நீங்கள் மிகவும் சிரமங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வந்தீர்கள். இந்தப்பகுதி கிராமங்கள் மீதும் புலிகள் அன்று தாக்குதல் நடத்தினர்.

பொலிஸாரைக் கொலை செய்தனர்.அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்ந்த யுகம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் சுதந்திரமாகவாழும் உரிமையை நாம் பெற்றுக் கொடுத்தோம். சிறந்த வாழ்க்கையை பெற்றுக் கொடுத்துள்ளோம்.நாட்டை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது பொறுப்பு என்பதை தெரிவிக்கின்றோம்.

எமது அரசாங்கம்மக்களின் நம்பிக்கையை வென்றே செயற்படுகின்றது. பொலனறுவை மக்களை பொறுத்தவரையில் இன்றுஎதிர்க்கட்சி இல்லை. வரலாற்றில் எதிர்க் கட்சி இல்லாமல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டமென்றால் அது பொலனறுவை மாவட்டம்தான்.

எனவே உங்களதுவாழ்க்கையை மேம்படுத்தும் பொறுப்பு எம்மிடமுள்ளது. எதிர்க்கட்சி இருந்தாலும்இல்லாவிட்டாலும் அந்த கடமையை நாம் செய்வோம். மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டஅரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக எந்த நேரம் எதிர்க்கட்சியாக முயற்சித்து கொண்டிருப்பதைவிடமக்களின் தேவையை புரிந்து கொண்டு நாட்டில் இடம்பெறுபவற்றை புரிந்து கொண்டு செயற்படுவதே மேலாகும்.எமது வேலைத் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும். ஊடகங்களூடாக செய்யப்படும்விமர்சனங்கள் நாட்டுக்கு தேவையாகும். அந்த விமர்சனங்களை நாங்கள் விரும்புகின்றோம்.எம்மால் விமர்சனங்களை கேட்டுக் கொண்டிருக்க முடியும். ஆனால் உள்நோக்கத்துடன் கூடிய விமர்சனத்தினால்என்ன நன்மை?

இனங்களுக்கிடையில்வைராக்கியம், மதங்களுக்கு இடையில் வைராக்கியம் இருப்பதில் பயனில்லை. எனவே எமக்குபொறுப்பு இருக்கிறது. நாம் மீட்டெடுத்த நாட்டை அபிவிருத்தி செய்வதைப் போன்று 30 வருடகாலமாகஅபிவிருத்தி செய்யப்பட முடியாத பிரதேங்களை மேம்படுத்துவது எமது கடமையாகும். ஊடகங்களுக்கு ஒருபொறுப்பு இருக்க வேண்டும்.

அது பாரிய பொறுப்பாகும்.நாம் பயணிக்கும் பாதையில் வைராக்கியம், குரோதம் என்பவற்றை விதைக்காமல் நாட்டின்அபிவிருத்தியை சுட்டிக்காட்டி நியாயமான விமர்சனத்தை முன்வைத்து ஜனநாயகத்தைபலப்படுத்துங்கள்.

நாம் வடக்கில்இடம்பெறுகின்ற கூட்டங்களுக்கு செல்கின்றோம். மக்களை சந்திக்கின்றோம். ஒருபோதும்வடக்கின் அபிவிருத்தியை நிறுத்துமாறு கூறியதில்லை. அந்த மக்கள் 30 வருடகாலமாகபிரபாகரனின் நிர்வாகத்தில் இருந்தனர். அன்று நாம் கொடுத்த பணத்தை அபிவிருத்திக்காகஅன்றி யுத்தத்துக்கே பயன்படுத்தினர். எனவே நாம் அவற்றை ஆரம்பத்திலிருந்து கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.ரயில் பாதையை முழுமையாக நிர்மாணிக்க வேண்டும். பாலங்களை அமைக்க வேண்டும். அழிக்கப்பட்டமருத்துவமனைகளை கட்டியெழுப்ப வேண்டும். சுகாதார அமைச்ர் அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றுமருத்துவமனைகளின் குறைபாடுகளை கேட்டறிந்துள்ளார்.

ஒரு மாகாணத்துக்கோஒரு பிரதேத்துக்கோ மட்டும் அபிவிருத்தி வரையறுக்கப்பட வில்லை. கடந்த 2 வருட காலமாகவீதிகளுக்காக அதிக செலவுகளை செய்தோம்.

இன்று வடக்கில்,தெற்கில் சிறந்த தொடர்புகள் காணப்படுகின்றன. வடக்கில் இருந்து தென்பகுதிக்கு மக்கள் வருகின்றனர். தென்பகுதியிலிருந்து வட பகுதிக்கு செல்கின்றனர். தேசிய ஒற்றுமை நாட்டில் இருக்க வேண்டும்.நாடொன்றினால் எந்த பிரச்சினையும் தீர்க்க முடியும். எம்மால் தீர்க்க முடியாத பிரச்சினைநாட்டில் இல்லை. செவிமடுக்கும் பலமுள்ளவர்கள் எம்மிடமுள்ளனர்.

அப்படியானால் நாம் செவிமடுக்கத்தயார். எமக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை ஏளனப்படுத்திநாட்டை அழிக்கும் நோக்கம் சிலருக்கு உள்ளது.

எந்தவொருபிரச்சினைக்கும் இலங்கைக் குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டுமே தவிர வெளிநாடுகளின் தேவைக்கேற்பதீர்வுகளை முன்வைக்க நாம் தயாரில்லை என்பதை தெளிவாக கூறுகின்றோம். சர்வதேத் தேவைக்கேற்பநாம் செயற்பட மாட்டோம். நாட்டு மக்களின் தேவைகNளூகற்ப செயற்படுவோம்.

எனவே எம்மீதுபொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தாமல் வெளிநாடுகளுக்கு சென்று பொய்களை கூற முற்படாமல்எமது பிரச்சினைகளை தீர்க்க எம்முடம் இணைந்து யெற்படதயாராகுங்கள் என்றும் அழைப்புவிடுத்தார்.

No comments:

Post a Comment