Monday, January 30, 2012

பலத்த பாதுகாப்புடன் பஞ்சாப், உத்தரகண்டில் அமைதியான வாக்குப்பதிவு!

Monday, January 30, 2012
சண்டிகர்::பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மாநிலத்திலும் காலையில் கடும் குளிர் நிலவியதால், மந்த கதியில் தொடங்கிய வாக்குப்பதிவு நேரம் செல்ல செல்ல சூடு பிடித்தது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத்துக்கு அண்மையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மணிப்பூரில் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.

இங்கு 82 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட்டில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இரு மாநிலங்களிலும் காலையில் கடும் குளிர் நிலவியதால் வாக்குச் சாவடிகளில் கூட்டம் குறைவாக இருந்தது.

நேரம் செல்ல செல்ல கூட்டம் சேர தொடங்கியது. வாக்குப்பதிவை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஞ்சாபில் 117 தொகுதிகள் உள்ளன. மொத்தம் 1,055 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 417 பேர் சுயேச்சைகள். 56 பேர் பெண்கள். இவர்களின் தலைவிதியை 1.76 கோடி வாக்காளர்கள் இன்று நிர்ணயிக்கிறார்கள். உத்தரகண்டில் 70 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 800 பேர் போட்டியிடுகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 6ம் தேதி எண்ணப்படுகிறது.

No comments:

Post a Comment