Sunday, January, 01,2012இலங்கை::இலங்கை விமானப்படையினர் ஆளில்லா உளவு விமானமொன்றை வெற்றிகரமாக தயாரித்துள்ளனர். இந்த விமானத்தைப் பயன்படுத்தி நூறு கிலோ மீற்றர் தூரம் வரையில் ஆளில்லாமல் உளவுப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஆளில்லா உளவு விமானங்களை கொள்வனவு செய்வதற்கு பாரியளவு பணம் தேவைப்படும் காரணத்தினால், விமானப்படையினர் உள்நாட்டிலேயே ஆளில்லா உளவு விமானத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
பத்து முதல் பதினைந்து கிலோ மீற்றர் வரையில் பறந்து சென்று உளவுப் பணிகளில் ஈடுபடக் கூடிய ஓர் விசேட உளவு விமானம் ஒன்றையும் விமானப்படையினர் உற்பத்தி செய்துள்ளனர்.
இதேவேளை, சைபர் தாக்குதல்களை முறியடிக்கக் கூடிய விசேட கணனி ஆய்வு கூடமொன்றை விமானப்படையினர் உருவாக்கியுள்ளனர். நாட்டின் முக்கிய கணனிக் கட்டமைப்புக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்காணித்து அவற்றை முறியடிப்பதற்கு இந்த ஆய்வு கூடம் பயன்படுத்தப்பட உள்ளது.
கையடக்கத் தொலைபேசிகளை ஜாம் செய்யவும் புதிய தொழில்நுட்பம் ஒன்றை விமானப்படையினர் உருவாக்கியுள்ளனர்.
இலங்கையின் பல சிறைச்சாலைகளில் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment