Sunday, January 1, 2012

பட்ஜெட் பற்றாக்குறை சமாளிக்க 40,000 கோடி கூடுதல் கடன்!

Sunday, January, 01,2012
புதுடெல்லி::பட்ஜெட் பற்றாக்குறையை சரிக்கட்டுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டதைவிட கூடுதலாக ஸி40 ஆயிரம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு 201112 நிதியாண்டில் பட்ஜெட் பற்றாக்குறை ஸி4.12 லட்சம் கோடியாக, அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 4.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதத்தில் பற்றாக்குறை ஸி3.53 லட்சம் கோடியை எட்டி விட்டதாக புள்ளி விவரம் கூறுகிறது. இது மொத்த மதிப்பில் 85.6 சதவீதம். நிதியாண்டின் மீதம் உள்ள 4 மாதங்களையும் கணக்கிட்டால் கூடுதலாக ஸி40 ஆயிரம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது. இதனால் பற்றாக்குறை மதிப்பு ஜிடிபியில் 5.5 சதவீதமாக அதிகரிக்கும். பணவீக்க உயர்வு, சர்வதேச நிதிநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதால் வரி வசூல் எதிர்பார்த்த அளவைவிட குறைந்துள்ளதே பற்றாக்குறை அதிகரிக்க முக்கிய காரணம். இதுதவிர, பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவில் இருந்ததால், திட்டமிட்டபடி ஸி40 ஆயிரம் கோடிக்கு அரசு நிறுவன பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதும் மற்றொரு காரணம்.

No comments:

Post a Comment