Thursday,January 05, 2012அண்ணா நகர்:முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழ வியாபாரிகள், முல்லை பெரியாறு அணையை உடைக்க நினைக்கும் கேரள அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்தினர். பழ மார்க்கெட் வளாகத்தில் உண்ணாவிரதமும் இருந்தனர். பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நடிகரும், இயக்குநருமான மணி வண்ணன், கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் சந்திரன், தலைவர் தியாகராஜன், திராட்சை வியாபாரிகள் சங்க நிர்வாகி குமார், பூ வியாபாரிகள் சங்க செயலாளர் மூக்காண்டி முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 200க்கும் அதிகமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசை கண்டித்து கோயம்பேடு பழ வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நடிகர் மணிவண்ணன் பேசுகிறார்.
No comments:
Post a Comment