Thursday, January 5, 2012

இங்கிலாந்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Thursday,January 05, 2012
லண்டன்: இந்தியாவின் புனேவை சேர்ந்தவர் அனுஜ் பிட்வே. வயது 23. இவர் இங்கிலாந்தில் உள்ள லான்கேஸ்டர் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் முதுநிலை படிப்பு படித்து வந்தார். கடந்த 26ம் தேதி மான்செஸ்டருக்கு நண்பர்கள், தோழிகளுடன் சுற்றுலா சென்ற போது மர்ம ஆசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டேப்லெடான் என்ற 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அனுஜ் பிட்வேயின் பெற்றோர் இந்தியாவில் இருந்து நேற்று லண்டன் வந்தனர். அனுஜ்ஜின் தந்தை சுபாஷ், தாய், மாமா ஆகியோர், இங்கிலாந்து உள்துறை அமைச்சக விவகார தலைவர் எம்.பி. கீத் வாசை சந்தித்து பேசினர். இதற்கிடையில், அனுஜ்ஜின் உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அனுஜ் உடலை நாளை இந்தியா கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment