Thursday, January 5, 2012

பலாங்கொடை பிள்ளகந்த பகுதியில் உள்ள காடொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்பு!

Thursday,January 05, 2012
இலங்கை::பலாங்கொடை பிள்ளகந்த பகுதியில் உள்ள காடொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு பிறந்து சில மணி நேரங்களின் பின்னர் காட்டிற்குள் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிசுவின் தயார் என சந்தேகிக்கப்படும் பெண் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த குறித்த பெண் நேற்றிரவு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிசுவின் தாயாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பெண்ணை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment