Thursday, January 12, 2012

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Thursday, January 12, 2012
சென்னை::ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல வாரியம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது, எந்த அடிப்படையில் காட்சிப் பொருளாக பயன்படுத்த தடைசெய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் கொண்டு வரப்பட்டன என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் செல்லப்பா பாண்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றார். அதற்கு, மத்திய அரசு வழக்கறிஞர், ஜல்லிகட்டை தடை செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.

மேலும், ஜல்லிக்கட்டை வீடியோ படம் எடுக்க வேண்டும் என்றும், எடுக்கப்படும் வீடியோ படங்கள் 20 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment