Thursday, January 12, 2012

ஜார்கண்ட் ரயில் விபத்து ஸ்டேஷன் மாஸ்டர், டிரைவர் உள்பட 6 பேர் சஸ்பெண்ட்!

Thursday, January 12, 2012
கொல்கத்தா::ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று 5 பேரை பலி வாங்கிய ரயில் விபத்து தொடர்பாக உதவி ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் டிரைவர் உள்பட 6 பேரை கிழக்கத்திய ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து டெல்லி செல்லும் பிரமபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலத்தில் கரோன்புரோடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதில் சரக்கு ரயில் டிரைவர், உதவி டிரைவர், கார்டு, சாகிப்கன்ச லோக்கோ இன்ஸ்பெக்டர், விபத்து நடந்தபோது பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் போர்ட¢டர் ஆகியோர் பணியில் கவனக்குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் 6 பேரையும் சஸ்பெண்ட் செய்ய கிழக்கத்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக இந்த வழி தடத்தில் செல்ல வேண்டிய 4 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தடம் புரண்ட பெட்டியை தவிர மற்ற பெட்டிகள் நேற்று டெல்லி போய் சேர்ந்தன.

No comments:

Post a Comment